திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் (21) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒனாறுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்கள், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, பிரஜா சக்தி தேசிய இயக்கத்தின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிகழ்ச்சித்திட்டம் (DCB) – 2026, கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம் – 2026, வீடமைப்புத் திட்டம் – 2025 மற்றும் 2026, நில செவன மற்றும் செவப்பியச திட்டங்கள் – 2026, அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணப் பணிகள், டித்வா புயலினால் ஏற்பட்ட வீடுகளுக்கான சேதங்கள் மற்றும் வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், குறித்த அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதுடன், திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல், அவற்றின் முன்னேற்றங்களை விரைவுபடுத்துதல் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, அவற்றை வினைத்திறனுடன் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது.
திருகோணமலையில் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் (21) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒனாறுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்கள், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது, பிரஜா சக்தி தேசிய இயக்கத்தின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிகழ்ச்சித்திட்டம் (DCB) – 2026, கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம் – 2026, வீடமைப்புத் திட்டம் – 2025 மற்றும் 2026, நில செவன மற்றும் செவப்பியச திட்டங்கள் – 2026, அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணப் பணிகள், டித்வா புயலினால் ஏற்பட்ட வீடுகளுக்கான சேதங்கள் மற்றும் வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.மேலும், குறித்த அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதுடன், திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல், அவற்றின் முன்னேற்றங்களை விரைவுபடுத்துதல் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, அவற்றை வினைத்திறனுடன் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது.