• Sep 08 2026

பெரும்போகச் செய்கைக்கு தயார் நிலையில் நீர்த்தேக்கங்கள் - நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு

Chithra / Sep 7th 2026, 12:37 pm
image


நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் எதிர்வரும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியியலாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


அதன்படி, நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 47.3 சதவீதமாக காணப்படுகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் 34.4 சதவீத நீர் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட ரீதியில் பார்க்கும்போது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 20 சதவீதத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தில் 21 சதவீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சதவீதமும், திருகோணமலை மாவட்டத்தில் 26 சதவீதமும் நீர் இருப்பு பதிவாகியுள்ளது.


தற்போது சிறுபோகச் செய்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் இருப்பு தற்போதைய விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எனினும், நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் சிக்கனமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், எதிர்வரும் மழைக்காலம் வரை குடிநீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்வதற்குத் தேவையான நீர் இருப்பு நீர்த்தேக்கங்களில் காணப்படுவதாக நீர் மேலாண்மைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 


குறிப்பாக அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பிரதான மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


இதேவேளை, எதிர்வரும் பெரும்போகச் செய்கைக்கான திட்டமிடல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நீர் இருப்பைக் கொண்டு 68 பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 4 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் உடனடியாக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், எஞ்சியுள்ள 308 நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 3.5 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், எதிர்வரும் மழைவீழ்ச்சி மற்றும் விவசாயிகளின் பங்கேற்புடன் நடைபெறும் கன்னக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


கன்னக் கூட்டங்களில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே எதிர்வரும் பெரும்போகச் செய்கை நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெரும்போகச் செய்கைக்கு தயார் நிலையில் நீர்த்தேக்கங்கள் - நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் எதிர்வரும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியியலாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதன்படி, நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 47.3 சதவீதமாக காணப்படுகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் 34.4 சதவீத நீர் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ரீதியில் பார்க்கும்போது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 20 சதவீதத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 21 சதவீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சதவீதமும், திருகோணமலை மாவட்டத்தில் 26 சதவீதமும் நீர் இருப்பு பதிவாகியுள்ளது.தற்போது சிறுபோகச் செய்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் இருப்பு தற்போதைய விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் சிக்கனமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், எதிர்வரும் மழைக்காலம் வரை குடிநீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்வதற்குத் தேவையான நீர் இருப்பு நீர்த்தேக்கங்களில் காணப்படுவதாக நீர் மேலாண்மைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பிரதான மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் பெரும்போகச் செய்கைக்கான திட்டமிடல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நீர் இருப்பைக் கொண்டு 68 பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 4 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் உடனடியாக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எஞ்சியுள்ள 308 நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 3.5 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், எதிர்வரும் மழைவீழ்ச்சி மற்றும் விவசாயிகளின் பங்கேற்புடன் நடைபெறும் கன்னக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.கன்னக் கூட்டங்களில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே எதிர்வரும் பெரும்போகச் செய்கை நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement