• Jul 19 2025

எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை

Chithra / Jun 23rd 2025, 10:26 am
image

 தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும்.

இது எங்களுடைய பிரச்சினை அல்ல. உலகின் சக்திவாய்ந்தவர்களின் பிரச்சினையாகும். 

அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றது. என்றார்.  

எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை  தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.இவ்வாறான போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும்.இது எங்களுடைய பிரச்சினை அல்ல. உலகின் சக்திவாய்ந்தவர்களின் பிரச்சினையாகும். அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றது. என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement

Buy Now