• Jun 04 2026

மாயமான 2.5 மில்லியன் டொலர் தொடர்பான அறிக்கை

dorin / Jun 4th 2026, 7:52 pm
image

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இணைய மோசடியாளர்களின் கைக்குச் சென்றமை தொடர்பான பொது திறைசேரியின் அறிக்கை, அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த குழு இன்று (04) கூடிய போது, அந்த அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

இந்த அறிக்கையை பரிசீலித்து, அடுத்த வாரம் இது தொடர்பாக நிதிச் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் கூறினார். 

பொது திறைசேரியினால் இந்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, அவர் அதனைப் பொறுப்பேற்க மறுத்து நேற்று (03) திருப்பி அனுப்பியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

குறித்த அறிக்கையை தனது வீட்டிற்கு அல்லாமல் பாராளுமன்றத்திற்கே சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி அவர் அதனைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாயமான 2.5 மில்லியன் டொலர் தொடர்பான அறிக்கை அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இணைய மோசடியாளர்களின் கைக்குச் சென்றமை தொடர்பான பொது திறைசேரியின் அறிக்கை, அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு இன்று (04) கூடிய போது, அந்த அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்த அறிக்கையை பரிசீலித்து, அடுத்த வாரம் இது தொடர்பாக நிதிச் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் கூறினார். பொது திறைசேரியினால் இந்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, அவர் அதனைப் பொறுப்பேற்க மறுத்து நேற்று (03) திருப்பி அனுப்பியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த அறிக்கையை தனது வீட்டிற்கு அல்லாமல் பாராளுமன்றத்திற்கே சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி அவர் அதனைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement