• Apr 29 2026

புகழ்பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்!

shanu / Apr 28th 2026, 12:38 pm
image

தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான அவர், 1980களில் ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மூலம் ஈழத்தமிழர்களிடம் பரவலாக அறிமுகமானார்.


இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களை பாடி வந்தார்.


தமிழகத்தின் திருநெல்லி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்ரல் 21 இல் பிறந்த இவர், 85 வது வயதில் இன்று (ஏப்ரல்,28) காலமானார்.


ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி.

போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த சி.பா.ஆதித்தனார் விரும்பினார். அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் சென்றதால் செல்லப்பா மேடையேற்றப்பட்டார்.


அவரது பாடல், பிடித்துப்போன சி. பா. ஆதித்தனார் செல்லப்பாவை தமது அரசியல் பிரசாரத்தில் நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார், அங்கிருந்தபடியே கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார் செல்லப்பா.


அந்த நேரத்தில் இலங்கையில் 1964 ஒக்டோபர் 30 இல் மலையக மக்களை வெளியேற்றும் ஶ்ரீமாவோ ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து இலட்சம் மலையகத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார்


அந்தப்பாடல். “செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா

இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை.. யாரும் துணைக்கிங்கே வரவில்லை ஆறுதல் வார்த்தைகள் தரவில்லை

செந்தமிழா மனம் பொங்குதடா சிங்களர் கொடுமை மிஞ்சுதடா“ இதனை மேடைதோறும் உணர்ச்சி மேலிடப் பாடினார் செல்லப்பா.


இந்தப்பாடல் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் பேபி சுப்பிரமணியம்த்தை கவர்ந்தது. அது 1980களின் தொடக்கம். ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் மூலமாக ஈழத்துபுரட்சிப்பாடல்களை பாடினார்.


1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார், யாழ்கோட்டை மைதானத்தில் நடந்த முத்தமிழ் விழாவில் அவரது கச்சேரி நடைபெற்றது, இலட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் அவரது கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.


விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் சந்தித்தார். கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இன்னும்பல கவிஞர்களால் எழுதிய பல பாடல்களை பாடியுள்ளார்.


புகழ்பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான அவர், 1980களில் ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மூலம் ஈழத்தமிழர்களிடம் பரவலாக அறிமுகமானார்.இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களை பாடி வந்தார்.தமிழகத்தின் திருநெல்லி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்ரல் 21 இல் பிறந்த இவர், 85 வது வயதில் இன்று (ஏப்ரல்,28) காலமானார்.ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி.போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த சி.பா.ஆதித்தனார் விரும்பினார். அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் சென்றதால் செல்லப்பா மேடையேற்றப்பட்டார்.அவரது பாடல், பிடித்துப்போன சி. பா. ஆதித்தனார் செல்லப்பாவை தமது அரசியல் பிரசாரத்தில் நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார், அங்கிருந்தபடியே கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார் செல்லப்பா.அந்த நேரத்தில் இலங்கையில் 1964 ஒக்டோபர் 30 இல் மலையக மக்களை வெளியேற்றும் ஶ்ரீமாவோ ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து இலட்சம் மலையகத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார்அந்தப்பாடல். “செந்தமிழா மனம் பொங்குதடா. சிங்களர் கொடுமை மிஞ்சுதடாஇதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை. யாரும் துணைக்கிங்கே வரவில்லை ஆறுதல் வார்த்தைகள் தரவில்லைசெந்தமிழா மனம் பொங்குதடா சிங்களர் கொடுமை மிஞ்சுதடா“ இதனை மேடைதோறும் உணர்ச்சி மேலிடப் பாடினார் செல்லப்பா.இந்தப்பாடல் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் பேபி சுப்பிரமணியம்த்தை கவர்ந்தது. அது 1980களின் தொடக்கம். ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் மூலமாக ஈழத்துபுரட்சிப்பாடல்களை பாடினார்.1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார், யாழ்கோட்டை மைதானத்தில் நடந்த முத்தமிழ் விழாவில் அவரது கச்சேரி நடைபெற்றது, இலட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் அவரது கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் சந்தித்தார். கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இன்னும்பல கவிஞர்களால் எழுதிய பல பாடல்களை பாடியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement