• Mar 14 2026

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து தொலைபேசி திருடியவருக்கு விளக்கமறியல்!

shanu / Jan 27th 2026, 2:09 pm
image


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 


யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி , அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் , சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார். 


அது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு , கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 


பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 


யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து தொலைபேசி திருடியவருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி , அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் , சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார். அது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு , கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement