• May 23 2026

எக்ஸ் பிரஸ் பேர்ள் ஏற்படுத்திய பாதிப்பிற்கான இழப்பீட்டை வழங்க மறுப்பு

Chithra / Sep 23rd 2025, 10:26 am
image

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானது. 

இதனால் நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. 

இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வௌியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எக்ஸ் பிரஸ் பேர்ள் ஏற்படுத்திய பாதிப்பிற்கான இழப்பீட்டை வழங்க மறுப்பு இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானது. இதனால் நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வௌியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement