• Dec 02 2025

முல்லை கடற்கரையில் குறையும் கடல் சீற்றம்; கொந்தளிக்கும் கடலலை - மீனவர்களே அவதானம்!

shanuja / Dec 1st 2025, 4:38 pm
image

முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக இருப்பதால் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப்பெற்றுள்ளது. 


இதன்போது கடலலையின் சீற்றம் அண்ணளவாக 10 அடிக்குமேல் உயர்ந்திருந்தது.  கடல் எது கரை என தெரியாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டிருந்தது.


ஆனால் தற்போது முன்னைய நாட்களை விட காற்றின் அளவும் மழையும் குறைவடைந்ததனால் முல்லைத்தீவு கடற்கரையின் சீற்றம் சற்று குறைவடைந்து செல்வதுடன் கடலலை கூடுதலாக இருக்கின்றது. 


எனினும் தேவையற்ற வகையில் கடற்கரைக்குச்  செல்வதனை இயன்றவரை தவிர்ப்பதும், தொழில் நிமித்தம் செல்லும் மீனவர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லை கடற்கரையில் குறையும் கடல் சீற்றம்; கொந்தளிக்கும் கடலலை - மீனவர்களே அவதானம் முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக இருப்பதால் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்போது கடலலையின் சீற்றம் அண்ணளவாக 10 அடிக்குமேல் உயர்ந்திருந்தது.  கடல் எது கரை என தெரியாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டிருந்தது.ஆனால் தற்போது முன்னைய நாட்களை விட காற்றின் அளவும் மழையும் குறைவடைந்ததனால் முல்லைத்தீவு கடற்கரையின் சீற்றம் சற்று குறைவடைந்து செல்வதுடன் கடலலை கூடுதலாக இருக்கின்றது. எனினும் தேவையற்ற வகையில் கடற்கரைக்குச்  செல்வதனை இயன்றவரை தவிர்ப்பதும், தொழில் நிமித்தம் செல்லும் மீனவர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement