நாட்டின் 15 மாவட்டங்களில் அடுத்து வரும் சில மணித்தியாலங்களுக்கு, மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பகுதிகள் சாதாரண இயல்பிலிருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, தற்போது வரை நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை; கடல் பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கும் நாட்டின் 15 மாவட்டங்களில் அடுத்து வரும் சில மணித்தியாலங்களுக்கு, மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பகுதிகள் சாதாரண இயல்பிலிருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனிடையே, தற்போது வரை நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது.