• May 04 2026

பிற்பகல் ஒரு மணிக்குப் பின் மழை பெய்யக் கூடும்.! இன்றைய வானிலை

Aathira / Dec 13th 2025, 7:27 am
image

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​

மேலும், நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.​

மத்திய மலை கிழக்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலைில் 30-40 கி.மி வேகத்தில் காற்று வீசும்.

மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அதிகாலை பனி மூட்டம் காணப்படும்.​

புத்தளம்-மன்னார்-காங்கேசன்துறை-திருகோணமலை-பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொழும்பு-புத்தளம்-திருகோணமலை-ஹம்பாந்தோட்டை-பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.​

பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சூழலில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது

பிற்பகல் ஒரு மணிக்குப் பின் மழை பெய்யக் கூடும். இன்றைய வானிலை வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​மேலும், நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.​மத்திய மலை கிழக்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலைில் 30-40 கி.மி வேகத்தில் காற்று வீசும். மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அதிகாலை பனி மூட்டம் காணப்படும்.​புத்தளம்-மன்னார்-காங்கேசன்துறை-திருகோணமலை-பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கொழும்பு-புத்தளம்-திருகோணமலை-ஹம்பாந்தோட்டை-பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.​பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சூழலில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது

Advertisement

Advertisement

Advertisement