• Sep 06 2026

கியூஆர் எரிபொருள் விநியோக முறை தொடரும் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Chithra / Sep 5th 2026, 12:02 pm
image


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


மேற்காசியாவில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இன்று சனிக்கிழமை (05) முதல் அமலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் லீற்றருக்கு 38 ரூபாவாலும், நாப்தா லீற்றருக்கு 35 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.


இதன்படி, ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து 210 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.


உலை எண்ணெய் மற்றும் நாப்தா ஆகியவற்றின் விலைக் குறைப்பை கருத்திற்கொண்டு, எதிர்வரும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது பொதுமக்களுக்கு அதற்கான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கியூஆர் எரிபொருள் விநியோக முறை தொடரும் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.மேற்காசியாவில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்று சனிக்கிழமை (05) முதல் அமலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் லீற்றருக்கு 38 ரூபாவாலும், நாப்தா லீற்றருக்கு 35 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து 210 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.உலை எண்ணெய் மற்றும் நாப்தா ஆகியவற்றின் விலைக் குறைப்பை கருத்திற்கொண்டு, எதிர்வரும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது பொதுமக்களுக்கு அதற்கான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement