• Nov 15 2025

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்! வெளியேறிய உறுப்பினர்

Chithra / Nov 14th 2025, 12:36 pm
image


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான  அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று  இடம்பெற்றது  

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆளுகையில் உள்ள இந்த சபையின் முதலாவது பாதீடாக இது அமைந்திருந்தது 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த சபையின்  பாதீடு இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் உறுப்பினர் ச.சத்தியசுதர்சனால் ஏற்கனவே சின்னச்சாளம்பன் பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை என வினா எழுப்பப்பட்டதை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர்  ச.சத்தியசுதர்சன் சபையில் இருந்து வெளியேறிச் சென்றார்.

இதனை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களால் சபையில் பாதீடு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 


புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம் வெளியேறிய உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான  அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று  இடம்பெற்றது  உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆளுகையில் உள்ள இந்த சபையின் முதலாவது பாதீடாக இது அமைந்திருந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த சபையின்  பாதீடு இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.இந் நிலையில் உறுப்பினர் ச.சத்தியசுதர்சனால் ஏற்கனவே சின்னச்சாளம்பன் பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை என வினா எழுப்பப்பட்டதை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்ப்பட்டது.இதையடுத்து உறுப்பினர்  ச.சத்தியசுதர்சன் சபையில் இருந்து வெளியேறிச் சென்றார்.இதனை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களால் சபையில் பாதீடு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement