சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய "கொலஸ்திரோல் நோய்" எனனும் பொதுமக்களிற்கான ஒரு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா கடந்த பருத்தித்துறை சூரிய மஹால் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.
பொது வைத்திய நிபுணர் க.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக மங்கல சுடர்களை நூல் ஆசிரியரின் ஆசான் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா, இருதய வைத்திய நிபுணர் ம.குருபரன், பேராசிரியர் மா.நடராஜசுந்தரம், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன்டிப்போல் டக்ளஸ்போல் நூலாசிரியரின் தாயார், நூலாசிரியரியரும் மனைவியும் மற்றும் பலர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து இறை வணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து வரவேற்புரையை வைத்தியர் ர.தேனுசன், தலமை உரையை பொது வைத்திய நிபுணர் க.சத்தியமூர்த்தி, ஆகியோர் நிகழ்த்தினர்.
வாழ்த்துரைகளை பேராசிரியர் மா.நடராஜசுந்தரம் மற்றும் இருதய வைத்திய நிபுணர் ம.குருபரன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பணியாளர் கிரிதரன் ஆகியோர் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து நூல் வெளியீட்டு உரையை பொது வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா நிகழ்த்தினார்.
நூலினை பொது வைத்திய நிபுணர் த.பேரானாந்தராஜா வெளியீட்டு வைக்க இருதய வைத்திய நிபுணர் ம.குருபரன் பெற்றுக் கொண்டார்.
மதிப்பீட்டு உரையை யாழ்ப்பாண தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் சி. ஜெயக்குமார் நிகழ்த்தினார்.
ஏற்புரையை நூல் ஆசான் வழங்கினார். நன்றி உரையை தாதிய உத்தியோகத்தர் இ. அபிரா வழங்கினார்.
இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இந் நூல் இலவசமாக வழங்கப்பட்டது. நூலாசிரியர் ஏற்கனவே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டு இலவசமாக வழங்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய கொலஸ்திரோல் நோய்" எனும் நூல் வெளியீடு. சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய "கொலஸ்திரோல் நோய்" எனனும் பொதுமக்களிற்கான ஒரு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா கடந்த பருத்தித்துறை சூரிய மஹால் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.பொது வைத்திய நிபுணர் க.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக மங்கல சுடர்களை நூல் ஆசிரியரின் ஆசான் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா, இருதய வைத்திய நிபுணர் ம.குருபரன், பேராசிரியர் மா.நடராஜசுந்தரம், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன்டிப்போல் டக்ளஸ்போல் நூலாசிரியரின் தாயார், நூலாசிரியரியரும் மனைவியும் மற்றும் பலர் ஏற்றி வைத்தனர்.தொடர்ந்து இறை வணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து வரவேற்புரையை வைத்தியர் ர.தேனுசன், தலமை உரையை பொது வைத்திய நிபுணர் க.சத்தியமூர்த்தி, ஆகியோர் நிகழ்த்தினர்.வாழ்த்துரைகளை பேராசிரியர் மா.நடராஜசுந்தரம் மற்றும் இருதய வைத்திய நிபுணர் ம.குருபரன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பணியாளர் கிரிதரன் ஆகியோர் வழங்கினார்.தொடர்ந்து மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து நூல் வெளியீட்டு உரையை பொது வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா நிகழ்த்தினார்.நூலினை பொது வைத்திய நிபுணர் த.பேரானாந்தராஜா வெளியீட்டு வைக்க இருதய வைத்திய நிபுணர் ம.குருபரன் பெற்றுக் கொண்டார்.மதிப்பீட்டு உரையை யாழ்ப்பாண தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் சி. ஜெயக்குமார் நிகழ்த்தினார்.ஏற்புரையை நூல் ஆசான் வழங்கினார். நன்றி உரையை தாதிய உத்தியோகத்தர் இ. அபிரா வழங்கினார்.இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் இந் நூல் இலவசமாக வழங்கப்பட்டது. நூலாசிரியர் ஏற்கனவே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டு இலவசமாக வழங்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.