நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மேலும், ஞானசார தேரர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுக்கும் பயணத் தடையையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ் தலைமை ஆய்வாளர் மூலம் இந்தப் பிடியாணை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஏற்கனவே கடந்த 2 தினங்களாக ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பகிரங்க பிடியாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரருக்கு பகிரங்க பிடியாணை - பயணத் தடையும் விதிப்பு நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.மேலும், ஞானசார தேரர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுக்கும் பயணத் தடையையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ் தலைமை ஆய்வாளர் மூலம் இந்தப் பிடியாணை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஏற்கனவே கடந்த 2 தினங்களாக ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பகிரங்க பிடியாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.