• May 12 2025

தையிட்டியில் மீண்டும் போராட்டம் - குவிக்கப்பட்ட பொலிஸார்

Chithra / May 12th 2025, 9:17 am
image


சட்டவிரோதமாக மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு  எதிரான போராட்டமானது இன்றையதினம் நடைபெற்று வருகிறது.

குறித்த விகாரை அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், 

குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்தவகையில் இன்றையதினமும் இந்த போராட்டமானது நடைபெறுகிறது.

போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழமைபோல் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவித்தவண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.


தையிட்டியில் மீண்டும் போராட்டம் - குவிக்கப்பட்ட பொலிஸார் சட்டவிரோதமாக மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு  எதிரான போராட்டமானது இன்றையதினம் நடைபெற்று வருகிறது.குறித்த விகாரை அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினமும் இந்த போராட்டமானது நடைபெறுகிறது.போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.வழமைபோல் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவித்தவண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement