இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை உயர்வைக் தொடர்ந்து, நாட்டில் இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டொலர் வீத உயர்வு மற்றும் இந்தியாவின் ஏற்றுமதித் தடை காரணமாக வரும் நாட்களில் மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரங்கள் மற்றும் நாணய மாற்று வீதங்களைக் கருத்திற்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று (20) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சந்தையிலுள்ள பால்மாக்களின் விலைகளில் மாற்றம் இருக்காது என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
புதிய விலையுடனான பால்மாக்கள் அடுத்த வாரத்திற்குள்ளேயே சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மாவின் விலை அதிகரிப்புத் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பால் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், உள்நாட்டுச் சந்தையில் சீனியின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதற்கிடையில், உலகளவில் சீனி உற்பத்தியில் முன்னிலையிலுள்ள இந்தியா, தனது உள்நாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் இந்தியாவிலிருந்தே சீனி இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இத்தடை காரணமாக இலங்கை தற்போது மாற்றுச் சந்தைகளை நாடியுள்ளது.
இதன்படி, பிரேசில் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான சீனி கையிருப்பில் உள்ளதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என நுகர்வோருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டொலரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் உயரும் விலைகள் இலங்கையர்களுக்கு ஷாக் நியூஸ் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை உயர்வைக் தொடர்ந்து, நாட்டில் இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டொலர் வீத உயர்வு மற்றும் இந்தியாவின் ஏற்றுமதித் தடை காரணமாக வரும் நாட்களில் மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.சந்தை நிலவரங்கள் மற்றும் நாணய மாற்று வீதங்களைக் கருத்திற்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி: 400 கிராம் பால்மா பாக்கெட்: 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 கிலோகிராம் பால்மா பாக்கெட்: 125 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த விலை அதிகரிப்பு இன்று (20) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சந்தையிலுள்ள பால்மாக்களின் விலைகளில் மாற்றம் இருக்காது என சங்கம் குறிப்பிட்டுள்ளது. புதிய விலையுடனான பால்மாக்கள் அடுத்த வாரத்திற்குள்ளேயே சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பால்மாவின் விலை அதிகரிப்புத் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பால் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், உள்நாட்டுச் சந்தையில் சீனியின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதற்கிடையில், உலகளவில் சீனி உற்பத்தியில் முன்னிலையிலுள்ள இந்தியா, தனது உள்நாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.இலங்கைக்கு அதிகளவில் இந்தியாவிலிருந்தே சீனி இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இத்தடை காரணமாக இலங்கை தற்போது மாற்றுச் சந்தைகளை நாடியுள்ளது. இதன்படி, பிரேசில் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான சீனி கையிருப்பில் உள்ளதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என நுகர்வோருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.டொலரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.