பொலிஸ் கடமையுடன் தொடர்புடைய பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர், கடுமையான உடல்நலப் பாதிப்புகளுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொரளை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சியில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே குறித்த அதிகாரி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பின்னர் அவரது முழுமையான சுயநினைவு இதுவரை திரும்பவில்லை எனவும், உணவு உட்கொள்வதற்கும் சுவாசிப்பதற்கும் தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கணவருக்கு 24 மணி நேரமும் பராமரிப்பு தேவைப்படுவதால், அவரை கவனித்துக்கொள்வதற்காக தன்னால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.
வாடகை வீட்டில் வசித்து வரும் இந்தக் குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் இல்லாத நிலையில், மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பது பெரும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான நிர்வாக நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவின் விசாரணை உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதிய நடைமுறை தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சிக்கல்களால் விபத்து நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் அனுதாபத்தைக் கேட்கவில்லை. எனது கணவருக்குச் சேர வேண்டிய உரிமையையும், எங்கள் குடும்பத்திற்கான நீதியையுமே கேட்கிறோம்” என அவரது மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக உடல்நலப் பாதிப்புடன் போராடி வரும் பொலிஸ் அதிகாரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு மற்றும் ஏனைய நன்மைகளை தாமதமின்றி பெற்றுத்தருமாறு பொலிஸ் மா அதிபரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விபத்தில் சிக்கி 3 ஆண்டுகளாக படுக்கையில் போராடும் பொலிஸ் அதிகாரி; மனைவியின் அவசர வேண்டுகோள் பொலிஸ் கடமையுடன் தொடர்புடைய பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர், கடுமையான உடல்நலப் பாதிப்புகளுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பொரளை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சியில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே குறித்த அதிகாரி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்குப் பின்னர் அவரது முழுமையான சுயநினைவு இதுவரை திரும்பவில்லை எனவும், உணவு உட்கொள்வதற்கும் சுவாசிப்பதற்கும் தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.கணவருக்கு 24 மணி நேரமும் பராமரிப்பு தேவைப்படுவதால், அவரை கவனித்துக்கொள்வதற்காக தன்னால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.வாடகை வீட்டில் வசித்து வரும் இந்தக் குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் இல்லாத நிலையில், மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பது பெரும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான நிர்வாக நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.விசேட புலனாய்வுப் பிரிவின் விசாரணை உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதிய நடைமுறை தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சிக்கல்களால் விபத்து நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.“நாங்கள் அனுதாபத்தைக் கேட்கவில்லை. எனது கணவருக்குச் சேர வேண்டிய உரிமையையும், எங்கள் குடும்பத்திற்கான நீதியையுமே கேட்கிறோம்” என அவரது மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளாக உடல்நலப் பாதிப்புடன் போராடி வரும் பொலிஸ் அதிகாரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு மற்றும் ஏனைய நன்மைகளை தாமதமின்றி பெற்றுத்தருமாறு பொலிஸ் மா அதிபரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.