சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சர்வதேச மட்டத்தில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்.
இதன்படி, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றிடம் அவர் எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாம் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கவில்லை என தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் தொடர்பில் சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக சர்வதேச அமைப்புகளில் தயாசிறி முறைப்பாடு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சர்வதேச மட்டத்தில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்.இதன்படி, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றிடம் அவர் எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார்.கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாம் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கவில்லை என தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் தொடர்பில் சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.