• Dec 02 2025

இலங்கைக்கு உதவ இந்திய வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அனுமதி!

Chithra / Dec 2nd 2025, 8:31 am
image

 

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்காக இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் அனுப்புவதற்கான தமது முயற்சிகள் தாமதமானதாக பாகிஸ்தான் முன்னதாக தெரிவித்திருந்தது.


நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் தங்களது விமானம் இந்திய வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளமையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.


தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை ஆதரவுடன், பாகிஸ்தான் ராணுவத்தின் 45 பேர் கொண்ட நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் C-130 ரக விமானத்தில் இலங்கைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.


எனினும், இந்த நடவடிக்கையை முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கை என்று பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்தும், இந்திய வான்பரப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த விமானப் பயணம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


மாற்று வழியில் பொருட்கள் இலங்கையைச் சென்றடைய சுமார் எட்டு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உதவி விமானங்களுக்கு இந்தியா தமது வான்வெளியை வழங்க மறுத்துவிட்டதாக சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தியா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு உதவ இந்திய வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அனுமதி  இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்காக இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் அனுப்புவதற்கான தமது முயற்சிகள் தாமதமானதாக பாகிஸ்தான் முன்னதாக தெரிவித்திருந்தது.நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் தங்களது விமானம் இந்திய வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளமையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை ஆதரவுடன், பாகிஸ்தான் ராணுவத்தின் 45 பேர் கொண்ட நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் C-130 ரக விமானத்தில் இலங்கைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.எனினும், இந்த நடவடிக்கையை முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கை என்று பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்தும், இந்திய வான்பரப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த விமானப் பயணம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மாற்று வழியில் பொருட்கள் இலங்கையைச் சென்றடைய சுமார் எட்டு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உதவி விமானங்களுக்கு இந்தியா தமது வான்வெளியை வழங்க மறுத்துவிட்டதாக சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தியா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement