• May 10 2026

மோட்டார் சைக்கிளை சாகசமாக திருடிய நபர்கள் - சிசிடிவியில் வெளியான காட்சி!

Thansita / Jun 25th 2025, 11:32 pm
image

மோட்டார் சைக்கிள் ஒன்றை இனந்தெரியாத இரண்டு நபர்கள் சாகசமான முறையில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தத் திருட்டுச் சம்பவம்  கிரிபத்கொட மஹர சந்திக்கு அருகில்  இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும்  அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BAX - 6732 என்ற பல்சர் கருப்பு நிற மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளனர். 


இந்தத் திருட்டுச் சம்பவம்  அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. 

சிசிடிவி காணொளியில் இளைஞர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு அருகில் வந்து மிகவும் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.   

சிசிடிவி பதிவுகளை வைத்து சந்தேகநபர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் கிரிபத்கொட பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


மோட்டார் சைக்கிளை சாகசமாக திருடிய நபர்கள் - சிசிடிவியில் வெளியான காட்சி மோட்டார் சைக்கிள் ஒன்றை இனந்தெரியாத இரண்டு நபர்கள் சாகசமான முறையில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இந்தத் திருட்டுச் சம்பவம்  கிரிபத்கொட மஹர சந்திக்கு அருகில்  இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும்  அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BAX - 6732 என்ற பல்சர் கருப்பு நிற மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம்  அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காணொளியில் இளைஞர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு அருகில் வந்து மிகவும் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.   சிசிடிவி பதிவுகளை வைத்து சந்தேகநபர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் கிரிபத்கொட பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement