சீரற்ற காலநிலையில் கன மழை காரணமாக சாமிமலை பெயர் லோன் தோட்டக் குடியிருப்பு பகுதிகளில் பூமி தாழ் இரக்கம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் லோன் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்று வரை அவர்கள் பாடசாலை கட்டிடத்திலே தங்கியுள்ளனர்.
அத்துடன் இன்று காலை முதல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான காலநிலை ஏற்பட்டு உள்ளது.
இப் பகுதியில் நிலைமை வழமைக்கு திரும்பி இருந்த போதிலும் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மண்திட்டுகள் அகற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லதண்ணி நகரில் உள்ள பொலிஸ் நிலைய பகுதியில் லக்சபான தோட்ட எமில்டன் வனப் பகுதியில் இருந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் இல்லை பாரிய மரங்கள் சியத்த கங்குல ஓயாவில் கிடைப்பதை காணக் கூடியதாக உள்ளது.
நல்லதண்ணி பிரதான வீதியில் லக்சபான தோட்ட பகுதியில் வீதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.
அரச பாடசாலையில் தஞ்சமடைந்த சாமிமலை பெயர் லோன் தோட்ட மக்கள் சீரற்ற காலநிலையில் கன மழை காரணமாக சாமிமலை பெயர் லோன் தோட்டக் குடியிருப்பு பகுதிகளில் பூமி தாழ் இரக்கம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் லோன் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இன்று வரை அவர்கள் பாடசாலை கட்டிடத்திலே தங்கியுள்ளனர்.அத்துடன் இன்று காலை முதல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான காலநிலை ஏற்பட்டு உள்ளது.இப் பகுதியில் நிலைமை வழமைக்கு திரும்பி இருந்த போதிலும் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மண்திட்டுகள் அகற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லதண்ணி நகரில் உள்ள பொலிஸ் நிலைய பகுதியில் லக்சபான தோட்ட எமில்டன் வனப் பகுதியில் இருந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் இல்லை பாரிய மரங்கள் சியத்த கங்குல ஓயாவில் கிடைப்பதை காணக் கூடியதாக உள்ளது.நல்லதண்ணி பிரதான வீதியில் லக்சபான தோட்ட பகுதியில் வீதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.