ஹட்டன்–யூலிஃபீல்ட் கொட்டகலை பிளாண்டேஷனுக்கு சொந்தமான யூலிஃபீல்ட் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் யூலிஃபீல்ட் தோட்டத்தில் இன்று பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையை மூடும் முயற்சி தொடர்பில் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து, கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான கௌரவ புஷ்பா விஷ்வநாதன் உடனடியாக யூலிஃபீல்ட் தோட்டத்திற்கு விஜயம் செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை புஷ்பா விஷ்வநாதன் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஏற்பட்டுள்ள நிலைமையை தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காத பட்சத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதுடன், அதனை முழு மலையகத்தையும் தழுவிய போராட்டமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையகத்தில் இயங்கி வரும் தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்படும் நிலைக்கு இடமளிக்கக் கூடாது. தொழிற்சாலைகளை பாதுகாப்பதன் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – களத்தில் இறங்கிய புஷ்பா விஷ்வநாதன் ஹட்டன்–யூலிஃபீல்ட் கொட்டகலை பிளாண்டேஷனுக்கு சொந்தமான யூலிஃபீல்ட் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் யூலிஃபீல்ட் தோட்டத்தில் இன்று பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலையை மூடும் முயற்சி தொடர்பில் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து, கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான கௌரவ புஷ்பா விஷ்வநாதன் உடனடியாக யூலிஃபீல்ட் தோட்டத்திற்கு விஜயம் செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.இதனையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை புஷ்பா விஷ்வநாதன் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஏற்பட்டுள்ள நிலைமையை தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காத பட்சத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதுடன், அதனை முழு மலையகத்தையும் தழுவிய போராட்டமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்துள்ளார்.மேலும், மலையகத்தில் இயங்கி வரும் தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்படும் நிலைக்கு இடமளிக்கக் கூடாது. தொழிற்சாலைகளை பாதுகாப்பதன் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.