• Aug 18 2025

தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு; மக்கள் அவதி

Chithra / Aug 18th 2025, 9:15 am
image


தபால் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக திருகோணமலை -  தோப்பூர் தபால் அலுவலகம் இன்று திங்கட்கிழமை (18) மூடப்பட்டு காணப்பட்டது.

இதனால் தபால் நிலையத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் சேவைகள் பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.

ஊழியர்கள் கடமையை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு, மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கப்படுவதில் தாமதம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

இதன் விளைவாக, இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என்று ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 


தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு; மக்கள் அவதி தபால் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக திருகோணமலை -  தோப்பூர் தபால் அலுவலகம் இன்று திங்கட்கிழமை (18) மூடப்பட்டு காணப்பட்டது.இதனால் தபால் நிலையத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் சேவைகள் பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.ஊழியர்கள் கடமையை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு, மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கப்படுவதில் தாமதம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என்று ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement