• May 22 2026

குடை சாய்ந்த உழவு இயந்திரம்; ஒருவர் உயிரிழப்பு!

shanu / Oct 22nd 2025, 9:28 am
image

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து பாவற்கொடிச்சேனை, பழங்குடியிருப்பு மடு  பகுதியில் நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்றதாக தெரியவருகிறது.


பாவற்கொடிச்சேனை, கண்ணகி நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே  விபத்தில்  உயிரிழந்தவராவார். 


தனது உழவு இயந்திரத்தினால் வயல் உழவு வேலைகளை மேற்கொண்டு விட்டு வீடு செல்கையிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

 

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். 


சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 


விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடை சாய்ந்த உழவு இயந்திரம்; ஒருவர் உயிரிழப்பு மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து பாவற்கொடிச்சேனை, பழங்குடியிருப்பு மடு  பகுதியில் நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்றதாக தெரியவருகிறது.பாவற்கொடிச்சேனை, கண்ணகி நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே  விபத்தில்  உயிரிழந்தவராவார். தனது உழவு இயந்திரத்தினால் வயல் உழவு வேலைகளை மேற்கொண்டு விட்டு வீடு செல்கையிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிய வருகிறது. விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement