• Apr 23 2026

ஒற்றை, இரட்டை எண் விவகாரம்; எரிபொருள் வழங்க மறுத்த ஊழியர் - கன்னத்தில் அறைந்த சாரதி!

shanu / Apr 22nd 2026, 4:36 pm
image

கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்த  ஊழியரை கார் சாரதி  தாக்கியுள்ளதாக கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் கெஸ்பேவ - பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. 


இன்று (22) அமுலிலுள்ள வாகன இலக்கத் தகட்டின் இரட்டை எண்களுக்குப் பதிலாக, ஒற்றை எண்ணைக் கொண்ட குறித்த வாகனத்திற்கு எரிபொருள் வழங்க ஊழியர் மறுத்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த சாரதி, ஊழியரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரின் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணைக் காண்பித்து, அவர் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி எனக்கூறி சாரதி எரிபொருளைப் பெற முயன்றுள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


எனினும், ஊழியர் அதனை நிராகரித்தமையாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள வாகன இலக்கத்தின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரான சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


ஒற்றை, இரட்டை எண் விவகாரம்; எரிபொருள் வழங்க மறுத்த ஊழியர் - கன்னத்தில் அறைந்த சாரதி கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்த  ஊழியரை கார் சாரதி  தாக்கியுள்ளதாக கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் கெஸ்பேவ - பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. இன்று (22) அமுலிலுள்ள வாகன இலக்கத் தகட்டின் இரட்டை எண்களுக்குப் பதிலாக, ஒற்றை எண்ணைக் கொண்ட குறித்த வாகனத்திற்கு எரிபொருள் வழங்க ஊழியர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதி, ஊழியரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காரின் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணைக் காண்பித்து, அவர் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி எனக்கூறி சாரதி எரிபொருளைப் பெற முயன்றுள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஊழியர் அதனை நிராகரித்தமையாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள வாகன இலக்கத்தின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரான சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement