• Aug 25 2026

மின்கல சேமிப்புடன் கூடிய சூரிய மின் திட்டங்களுக்கு புதிய கொள்முதல் கட்டணங்கள்

Chithra / Aug 25th 2026, 10:29 am
image


மின்கலச் சேமிப்பு வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தப் புதிய கட்டணங்கள் 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் 2027 பெப்ரவரி 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்படக்கூடிய மின்சாரப் பற்றாக்குறையைத் தவிர்த்து, மின்வெட்டுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் 450 மெகாவாட் சூரிய மின்சக்தி மற்றும் மின்கலச் சேமிப்பு திறனை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


புதிய கொள்முதல் கட்டண முறையின் கீழ், 250 கிலோவாட் முதல் 1,000 கிலோவாட் வரையிலான கூரைமேல் சூரிய மின்சக்தி மற்றும் மின்கலச் சேமிப்பு அமைப்புகளுக்கு, முன்னுரிமைக் காலத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு அலகு மின்சாரத்திற்கு 45.53 ரூபாய் வழங்கப்படவுள்ளது.


1,000 கிலோவாட்டை விட அதிக கொள்ளளவு கொண்ட அமைப்புகளுக்கு ஒரு அலகிற்கு 42.49 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தரைமட்ட மற்றும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கும் அவற்றின் கொள்ளளவுக்கு ஏற்ப தனித்தனி கொள்முதல் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, திட்டத்தின் கொள்ளளவைப் பொறுத்து ஒரு அலகு மின்சாரத்திற்கு 23.11 ரூபாய் முதல் 15.81 ரூபாய் வரை வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மின்கல சேமிப்புடன் கூடிய சூரிய மின் திட்டங்களுக்கு புதிய கொள்முதல் கட்டணங்கள் மின்கலச் சேமிப்பு வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் புதிய கட்டணங்கள் 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் 2027 பெப்ரவரி 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்படக்கூடிய மின்சாரப் பற்றாக்குறையைத் தவிர்த்து, மின்வெட்டுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் 450 மெகாவாட் சூரிய மின்சக்தி மற்றும் மின்கலச் சேமிப்பு திறனை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய கொள்முதல் கட்டண முறையின் கீழ், 250 கிலோவாட் முதல் 1,000 கிலோவாட் வரையிலான கூரைமேல் சூரிய மின்சக்தி மற்றும் மின்கலச் சேமிப்பு அமைப்புகளுக்கு, முன்னுரிமைக் காலத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு அலகு மின்சாரத்திற்கு 45.53 ரூபாய் வழங்கப்படவுள்ளது.1,000 கிலோவாட்டை விட அதிக கொள்ளளவு கொண்ட அமைப்புகளுக்கு ஒரு அலகிற்கு 42.49 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தரைமட்ட மற்றும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கும் அவற்றின் கொள்ளளவுக்கு ஏற்ப தனித்தனி கொள்முதல் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, திட்டத்தின் கொள்ளளவைப் பொறுத்து ஒரு அலகு மின்சாரத்திற்கு 23.11 ரூபாய் முதல் 15.81 ரூபாய் வரை வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement