பயணிகள் தற்போது LMT GO மொபைல் செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்களையும் வருகை நேரங்களையும் கண்காணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இந்த புதிய வசதியின் தொடக்க விழாவில் பேசிய பிரசன்ன குணசேன,
ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய இந்தச் சேவை, பேருந்துகள் தங்கள் நிறுத்தங்களுக்கு எப்போது வரும் என்பதைச் சரிபார்க்கவும், இயக்கப்படும் பேருந்து மற்றும் கட்டண விவரங்களைக் காணவும், வரவிருக்கும் இடங்களுக்கான உத்தேச பயண நேரங்களைக் கண்காணிக்கவும் பயணிகளுக்கு உதவுகிறது.
மேலும், பயணிகளுக்கு மிகவும் திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய சேவையைப் பயன்படுத்திக்கொள்ள, பயணிகள் LMT GO செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மெட்ரோ பேருந்துகளுக்கு புதிய ஜிபிஎஸ் கண்காணிப்பு அம்சம் அறிமுகம் பயணிகள் தற்போது LMT GO மொபைல் செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்களையும் வருகை நேரங்களையும் கண்காணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.இந்த புதிய வசதியின் தொடக்க விழாவில் பேசிய பிரசன்ன குணசேன, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய இந்தச் சேவை, பேருந்துகள் தங்கள் நிறுத்தங்களுக்கு எப்போது வரும் என்பதைச் சரிபார்க்கவும், இயக்கப்படும் பேருந்து மற்றும் கட்டண விவரங்களைக் காணவும், வரவிருக்கும் இடங்களுக்கான உத்தேச பயண நேரங்களைக் கண்காணிக்கவும் பயணிகளுக்கு உதவுகிறது.மேலும், பயணிகளுக்கு மிகவும் திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த புதிய சேவையைப் பயன்படுத்திக்கொள்ள, பயணிகள் LMT GO செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.