ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான முதலாவது புதிய சாலைப் பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
துமேன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த 1 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலம், ரஷ்யாவின் காசான் மற்றும் வடகொரியாவின் ராசான் பகுதிகளை இணைக்கிறது.
தினசரி 300 வாகனங்கள் வரை இந்தப் பாலத்தின் ஊடாக பயணிக்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
யாகோவ் நோவிசென்கோ என்ற சோவியத் இராணுவ அதிகாரியின் பெயர் இந்தப் பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
1946ஆம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் இல் சுங்கை படுகொலை முயற்சியிலிருந்து காப்பாற்றியதாகக் கூறப்படும் நபர் இவர்.
பாலத்தின் திறப்பு விழாவில் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
புதிய பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
ரஷ்யா–வடகொரியா இடையிலான உறவு உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மேலும் நெருக்கமடைந்துள்ள நிலையில், இந்தப் புதிய சாலை இணைப்பு இரு நாடுகளின் மூலோபாய ஒத்துழைப்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
வடகொரியா ரஷ்யாவுக்கு இராணுவ ஆதரவு வழங்கி வருவதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதிய பாலம் எதிர்காலத்தில் இராணுவ தளவாடப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படலாம் என சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தப் பாலத்தின் முக்கிய நோக்கம் வர்த்தகம் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதாக ரஷ்யா மற்றும் வடகொரியா தெரிவித்துள்ளன.
ரஷ்யா–வடகொரியாவை இணைத்த புதிய பாலம் ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான முதலாவது புதிய சாலைப் பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.துமேன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த 1 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலம், ரஷ்யாவின் காசான் மற்றும் வடகொரியாவின் ராசான் பகுதிகளை இணைக்கிறது. தினசரி 300 வாகனங்கள் வரை இந்தப் பாலத்தின் ஊடாக பயணிக்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.யாகோவ் நோவிசென்கோ என்ற சோவியத் இராணுவ அதிகாரியின் பெயர் இந்தப் பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. 1946ஆம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் இல் சுங்கை படுகொலை முயற்சியிலிருந்து காப்பாற்றியதாகக் கூறப்படும் நபர் இவர்.பாலத்தின் திறப்பு விழாவில் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். புதிய பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என இரு தரப்பும் தெரிவித்துள்ளன.ரஷ்யா–வடகொரியா இடையிலான உறவு உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மேலும் நெருக்கமடைந்துள்ள நிலையில், இந்தப் புதிய சாலை இணைப்பு இரு நாடுகளின் மூலோபாய ஒத்துழைப்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. வடகொரியா ரஷ்யாவுக்கு இராணுவ ஆதரவு வழங்கி வருவதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதிய பாலம் எதிர்காலத்தில் இராணுவ தளவாடப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படலாம் என சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனினும், இந்தப் பாலத்தின் முக்கிய நோக்கம் வர்த்தகம் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதாக ரஷ்யா மற்றும் வடகொரியா தெரிவித்துள்ளன.