நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்த தூதுவர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடி புரிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தூதுவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம்.ஹேமந்த குமாரவையும் சந்தித்தார்.
பின்னர், டச்சு காலனித்துவ பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை கோட்டை பிரெட்ரிக் (Fort Frederick) பகுதிக்கும் அவர் விஜயம் மேற்கொண்டார்.
நெதர்லாந்து தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு முதல் உத்தியோகபூர்வ விஜயம் நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்த தூதுவர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடி புரிந்துகொண்டார்.இதனைத் தொடர்ந்து, தூதுவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம்.ஹேமந்த குமாரவையும் சந்தித்தார்.பின்னர், டச்சு காலனித்துவ பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை கோட்டை பிரெட்ரிக் (Fort Frederick) பகுதிக்கும் அவர் விஜயம் மேற்கொண்டார்.