• May 17 2024

கிளிநொச்சியில் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்..!!

Tamil nila / Apr 29th 2024, 7:44 pm
image

Advertisement

மின்னியலாளர்களுக்கான உரிமம் வழங்கும் முறை மற்றும் குறைந்தபட்சம் தேவையான தகுதிகளை வழங்கும் இலவச திட்டத்தை(தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3, NVQ 3) செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சார தொழில்களை செய்யும் மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்னியலாளர்களுக்கு NVQ - 3 சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை தொழிற்பயிற்சிஅதிகாரசபை மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் சங்கம் ஆகியவை இந்த உரிம முறையைநடைமுறைப்படுத்துகின்றன. குறித்தஉரிமம் வழங்கும் முறைமை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

2026ம் ஜனவரி மாதம் 01ம் திகதிக்கு பின்னர், மின்னியலாளர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள குறைந்தபட்சம் தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் - 3 சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

2030ம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்கு பின்னர், மின்னியலாளர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள குறைந்தபட்சம் தேசிய தொழிற்கல்வித் சான்றிதழை தகைமை மட்டம் - 4 பெற்றிருக்க வேண்டும். 

தற்போது தொழிலில் தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3 (NVQ 3) சான்றிதழ் இல்லாத மின்னியலாளர்களுக்காக இலவசமாக தேசிய தொழிற்கல்வித் தகைமை - மட்டம் 3 சான்றிதழை வழங்கும் திட்டம் 2021 முதல் நடைமுறையிலுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு கட்டம் மே மாதம் #கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கான திகதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கான இலவச இத்திட்டத்தில், 18 மாதங்களுக்கும் அதிகமான தொழில் அனுபவம் உள்ள மின்னியலாளர்களுக்கு இலவச NVQ 3 பதிவு மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (Skill Development officer) உதவியுடன் அந்தந்த பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மின்னியலாளர் தொழிலை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மேற்கொள்ளும் அனைத்து மின்னியலாளர்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 15ம் திகக்கு முன்னர் கிளிநொச்சி  மாவட்டத்திலுள்ள மின்னியலாளர்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் உள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை(Skill Development officer) தொடர்பு கொண்டு  விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




கிளிநொச்சியில் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம். மின்னியலாளர்களுக்கான உரிமம் வழங்கும் முறை மற்றும் குறைந்தபட்சம் தேவையான தகுதிகளை வழங்கும் இலவச திட்டத்தை(தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3, NVQ 3) செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.2009 ம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சார தொழில்களை செய்யும் மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.மின்னியலாளர்களுக்கு NVQ - 3 சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை தொழிற்பயிற்சிஅதிகாரசபை மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் சங்கம் ஆகியவை இந்த உரிம முறையைநடைமுறைப்படுத்துகின்றன. குறித்தஉரிமம் வழங்கும் முறைமை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.2026ம் ஜனவரி மாதம் 01ம் திகதிக்கு பின்னர், மின்னியலாளர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள குறைந்தபட்சம் தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் - 3 சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.2030ம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்கு பின்னர், மின்னியலாளர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள குறைந்தபட்சம் தேசிய தொழிற்கல்வித் சான்றிதழை தகைமை மட்டம் - 4 பெற்றிருக்க வேண்டும். தற்போது தொழிலில் தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3 (NVQ 3) சான்றிதழ் இல்லாத மின்னியலாளர்களுக்காக இலவசமாக தேசிய தொழிற்கல்வித் தகைமை - மட்டம் 3 சான்றிதழை வழங்கும் திட்டம் 2021 முதல் நடைமுறையிலுள்ளது.இந்த நிகழ்ச்சியின் மற்றொரு கட்டம் மே மாதம் #கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கான திகதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கான இலவச இத்திட்டத்தில், 18 மாதங்களுக்கும் அதிகமான தொழில் அனுபவம் உள்ள மின்னியலாளர்களுக்கு இலவச NVQ 3 பதிவு மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.கிளிநொச்சி மாவட்டத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (Skill Development officer) உதவியுடன் அந்தந்த பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மின்னியலாளர் தொழிலை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மேற்கொள்ளும் அனைத்து மின்னியலாளர்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 15ம் திகக்கு முன்னர் கிளிநொச்சி  மாவட்டத்திலுள்ள மின்னியலாளர்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் உள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை(Skill Development officer) தொடர்பு கொண்டு  விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement