வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறத்திருவிழா, இன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள புடைசூழ இடம்பெற்றுள்ளது.
நல்லூரானின் இன்றைய 23ஆம் நாள் திருவிழாவின் பகல் திருவிழா காலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று முடிவடைந்த நிலையில் தற்போது மாலைத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
மாலைத்தருவிழாவின் பூசைகள் ஆரம்பமாகி இடம்பெற்ற முருகன் வசந்தமண்டபத்திலிருந்து எழுந்தருளி காட்சியளித்தார்.
பூசைகள் நிறைவுற்ற பின்னர் நல்லூரானின் பிரம்மாண்டமான சப்பறத்தில் முருகன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தார்.
நல்லுரானின் சப்பறத்திருவிழாவைக் காண மக்கள் அலைகடலென திரண்டு சென்றுள்ளனர். சப்பறத்தில் முருகன் அமர்ந்து உலாவந்த காட்சி பக்தர்களை பரவசமடைய வைத்தது.
பல வண்ணங்களுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் சப்பறத்தில் முருகன் அழகாக வலம் வந்துள்ளார்.
நல்லூரானின் மஹோற்சவம் நிறைவடைய இன்றும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்றை மாலைத் திருவிழாவான சப்பறத் திருவிழாவைக் காண மக்கள் படையெடுத்து சென்றுள்ளனர்.
இதேபோன்று நாளை காலை தேர்த்திருவிழாவும் நாளைமறுநாள் தீர்த்தத் திருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக சப்பறத்தில் காட்சியளித்த நல்லூரான் ;அருள் வேண்டி அலைகடலென திரண்ட மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறத்திருவிழா, இன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள புடைசூழ இடம்பெற்றுள்ளது. நல்லூரானின் இன்றைய 23ஆம் நாள் திருவிழாவின் பகல் திருவிழா காலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று முடிவடைந்த நிலையில் தற்போது மாலைத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மாலைத்தருவிழாவின் பூசைகள் ஆரம்பமாகி இடம்பெற்ற முருகன் வசந்தமண்டபத்திலிருந்து எழுந்தருளி காட்சியளித்தார். பூசைகள் நிறைவுற்ற பின்னர் நல்லூரானின் பிரம்மாண்டமான சப்பறத்தில் முருகன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தார். நல்லுரானின் சப்பறத்திருவிழாவைக் காண மக்கள் அலைகடலென திரண்டு சென்றுள்ளனர். சப்பறத்தில் முருகன் அமர்ந்து உலாவந்த காட்சி பக்தர்களை பரவசமடைய வைத்தது. பல வண்ணங்களுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் சப்பறத்தில் முருகன் அழகாக வலம் வந்துள்ளார். நல்லூரானின் மஹோற்சவம் நிறைவடைய இன்றும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்றை மாலைத் திருவிழாவான சப்பறத் திருவிழாவைக் காண மக்கள் படையெடுத்து சென்றுள்ளனர். இதேபோன்று நாளை காலை தேர்த்திருவிழாவும் நாளைமறுநாள் தீர்த்தத் திருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.⭕https://web.facebook.com/share/v/16qFGGY7ns/