வீடொன்றில் மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் வீடு தரைமட்டமாகியுள்ளதுடன் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இந்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
வீட்டில் திடீரென மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
தகவலறிந்து குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர்.
அங்கு வெடிவிபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை பலத்த முயற்சிக்கு பின்னர் மீட்டனர்.
அதில் இடிபாடுகளில் சிக்கி ஐவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக மாநில பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் வெடித்து சிதறிய மர்மப்பொருள்; தரைமட்டமாகிய வீடு - ஐவர் உயிரிழப்பு வீடொன்றில் மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் வீடு தரைமட்டமாகியுள்ளதுடன் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இந்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.வீட்டில் திடீரென மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அங்கு வெடிவிபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை பலத்த முயற்சிக்கு பின்னர் மீட்டனர். அதில் இடிபாடுகளில் சிக்கி ஐவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக மாநில பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.