முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவாக ஜனநாயக போராளிகள் கட்சியினரால் பருத்தித்துறை நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பருத்தித்துறை நவீன சந்தை தொகுதியில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி தலைமையில் மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததித்தில் மக்கள் பருக்கிய உப்புக் கஞ்சி பரிமாறப்பட்ட்து.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான கிருஷ்ணகோபால் கலைச்செல்வன், அகஸ்டின், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நாகர்கோவில் குட்டி, பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களான ஜெயானந்தம் ஜெயகோபி, ஸ்ரீக்கண்ணன் ஸ்ரீபிரகாஷ் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவாக ஜனநாயக போராளிகள் கட்சியினரால் பருத்தித்துறை நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. பருத்தித்துறை நவீன சந்தை தொகுதியில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி தலைமையில் மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததித்தில் மக்கள் பருக்கிய உப்புக் கஞ்சி பரிமாறப்பட்ட்து. இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான கிருஷ்ணகோபால் கலைச்செல்வன், அகஸ்டின், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நாகர்கோவில் குட்டி, பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களான ஜெயானந்தம் ஜெயகோபி, ஸ்ரீக்கண்ணன் ஸ்ரீபிரகாஷ் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.