முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தையொட்டி தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, உயிரிழப்புகள் மற்றும் காணாமற்போனோரின் நீதி தேடல் ஆகியவற்றை நினைவூட்டும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் இன்று மாலை 5.30 மணியளவில், முன்னம்போடிவெட்டை பகுதியில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், வரலாற்று நினைவுகளை எச்சரிக்கையாக சுமக்கும் அரசியல் செயற்பாடாகவும் அமைந்தது.
நிகழ்வில் பங்கேற்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், முள்ளிவாய்க்காலை மௌனமாகவே நினைவுகூர முடியாது; அது நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் செயலாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தையொட்டி தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, உயிரிழப்புகள் மற்றும் காணாமற்போனோரின் நீதி தேடல் ஆகியவற்றை நினைவூட்டும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அந்தவகையில் இன்று மாலை 5.30 மணியளவில், முன்னம்போடிவெட்டை பகுதியில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், வரலாற்று நினைவுகளை எச்சரிக்கையாக சுமக்கும் அரசியல் செயற்பாடாகவும் அமைந்தது. நிகழ்வில் பங்கேற்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், முள்ளிவாய்க்காலை மௌனமாகவே நினைவுகூர முடியாது; அது நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் செயலாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.