முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ விடுதித் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோகக் கட்டமைப்பு போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பகுதி அமைக்கப்படவுள்ளது.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்டோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையானது குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாகக் காணப்படுவதால், படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்காக இந்தக் கட்டடம் அமைக்கப்படுகின்றது.
வெளிநாட்டுப் பயிற்சி முடித்துத் திரும்பும் விசேட வைத்தியர்களை நியமிப்பதில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக நிதியுதவி வழங்கிய இந்திய அரசுக்கும் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் நன்றிகள்." - என்றார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்,
இந்தியா - இலங்கை இடையிலான நீண்ட கால நட்புறவின் சான்றாக இந்தத் திட்டம் விளங்குகின்றது. ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தியா தொடர்ந்து நம்பகமான பங்காளியாகத் திகழும்.
'அயல் நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவு வெறும் அயல்நாடு என்ற நிலையைத் தாண்டிய வரலாற்றுப் பிணைப்புமிக்கது." - என்றார்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு வைத்தியசாலை புதிய மருத்துவ விடுதி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ விடுதித் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோகக் கட்டமைப்பு போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பகுதி அமைக்கப்படவுள்ளது.தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்டோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையானது குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாகக் காணப்படுவதால், படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்காக இந்தக் கட்டடம் அமைக்கப்படுகின்றது.வெளிநாட்டுப் பயிற்சி முடித்துத் திரும்பும் விசேட வைத்தியர்களை நியமிப்பதில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக நிதியுதவி வழங்கிய இந்திய அரசுக்கும் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் நன்றிகள்." - என்றார்.இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்,இந்தியா - இலங்கை இடையிலான நீண்ட கால நட்புறவின் சான்றாக இந்தத் திட்டம் விளங்குகின்றது. ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தியா தொடர்ந்து நம்பகமான பங்காளியாகத் திகழும்.'அயல் நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவு வெறும் அயல்நாடு என்ற நிலையைத் தாண்டிய வரலாற்றுப் பிணைப்புமிக்கது." - என்றார்.நினைவுப் பலகையைத் திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.