• Dec 02 2025

வௌ்ளத்தில் மூழ்கிய மூதூர் பகுதி -அனர்த்த நிவாரண நடவடிக்கை தீவிரம்!

dileesiya / Dec 1st 2025, 1:46 pm
image

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியான  மூதூர் பகுதி வௌ்ளத்தால் மூழ்கியுள்ளது. 


மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்தாமை காரணமாக இவ்வாறு அந்த வீதி வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது. 


அப்பகுதியில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதாக அங்கிக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 


இதனால் மீட்புப் பணிகள் அங்கே வான்வழி ஊடாகவே இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அதேநேரம் வௌ்ளத்தால் கந்தளாய் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன்  மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான 309 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 


அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (30) உடைந்ததால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


அதன்படி,   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மூதூர் கல்கந்த விகாரை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 


கடற்படைக்குச் சொந்தமான படகுடன் கடலோர ரோந்துப் படகு என்பன மூதூர் பிரதேசத்தை அண்மித்த கடல் பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 


மேலும், இந்த மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கையை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




வௌ்ளத்தில் மூழ்கிய மூதூர் பகுதி -அனர்த்த நிவாரண நடவடிக்கை தீவிரம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியான  மூதூர் பகுதி வௌ்ளத்தால் மூழ்கியுள்ளது. மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்தாமை காரணமாக இவ்வாறு அந்த வீதி வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதாக அங்கிக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனால் மீட்புப் பணிகள் அங்கே வான்வழி ஊடாகவே இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் வௌ்ளத்தால் கந்தளாய் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான 309 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (30) உடைந்ததால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி,   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மூதூர் கல்கந்த விகாரை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடற்படைக்குச் சொந்தமான படகுடன் கடலோர ரோந்துப் படகு என்பன மூதூர் பிரதேசத்தை அண்மித்த கடல் பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கையை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement