திருகோணமலை - மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
எரிபொருள் நிரப்பி விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் - மூதூரில் பதற்றம் திருகோணமலை - மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. எரிபொருள் நிரப்பி விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனதீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.