சுமார் 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா' (NASA) அறிவித்துள்ளது.
கடந்த 1905ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஸ்பெயின் நாட்டில் தெளிவாகப் புலப்படவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சூரிய கிரகணம், வரவிருக்கும் ஆகஸ்ட் 12ஆம் திகதி நிகழவுள்ளது. ஸ்பெயின் தவிர்த்து கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகல் நாட்டின் சில பகுதிகளிலும் இந்நிகழ்வைக் கண்டுகளிக்க முடியும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாகக் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது, சூரிய ஒளி பூமிக்கு வருவதை முழுமையாகத் தடுக்கிறது. இதனால் பிற்பகல் நேரத்திலேயே மாலை அல்லது இரவு வேளையைப் போல வானம் சட்டென இருளடையும்.
எதிர்பாராத இந்த திடீர் இருள் காரணமாக, பறவைகள் மற்றும் விலங்குகளின் இயல்பு நடத்தையில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படும்.
முன்னதாக, இத்தகைய அபூர்வ முழு சூரிய கிரகணங்கள் கடந்த 2019இல் சிலியிலும், 2021இல் அண்டார்டிகாவிலும், அண்மையில் 2024இல் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூரியனை முழுமையாக மறைக்கும் சந்திரன்: விலங்குகளின் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் கிரகணம் சுமார் 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா' (NASA) அறிவித்துள்ளது.கடந்த 1905ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஸ்பெயின் நாட்டில் தெளிவாகப் புலப்படவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சூரிய கிரகணம், வரவிருக்கும் ஆகஸ்ட் 12ஆம் திகதி நிகழவுள்ளது. ஸ்பெயின் தவிர்த்து கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகல் நாட்டின் சில பகுதிகளிலும் இந்நிகழ்வைக் கண்டுகளிக்க முடியும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாகக் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது, சூரிய ஒளி பூமிக்கு வருவதை முழுமையாகத் தடுக்கிறது. இதனால் பிற்பகல் நேரத்திலேயே மாலை அல்லது இரவு வேளையைப் போல வானம் சட்டென இருளடையும்.எதிர்பாராத இந்த திடீர் இருள் காரணமாக, பறவைகள் மற்றும் விலங்குகளின் இயல்பு நடத்தையில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படும்.முன்னதாக, இத்தகைய அபூர்வ முழு சூரிய கிரகணங்கள் கடந்த 2019இல் சிலியிலும், 2021இல் அண்டார்டிகாவிலும், அண்மையில் 2024இல் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.