• Aug 18 2025

அரசியல் லாபத்திற்காக கதவடைப்புக்கு ஆதரவுகோரும் சுமந்திரன்; அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு

Chithra / Aug 17th 2025, 2:59 pm
image

அரசியல் லாபத்திற்காகவே முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு நாளை வடக்கு கிழக்கில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி சுமந்திரன் கோரிக்கை விடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டினார். 

போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க இன்றைய தினம்  கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.  

இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் பலர் முன்னைய காலங்களை போலவே தமது செயற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறிப்பாக தமிழரசு கட்சியின் சுமந்திரன், முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு நாளை வடக்கு கிழக்கில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை  விடுத்துள்ளார். 

இவர் பல பதவிகளை வகித்த காலப்பகுதியில்  முத்தையங்கட்டு பகுதிக்கு சென்றுள்ளாரா? அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா? 

தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே அதனை கருதியே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்புபடுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றோம் இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் என தெரிவித்தார்.

அரசியல் லாபத்திற்காக கதவடைப்புக்கு ஆதரவுகோரும் சுமந்திரன்; அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு அரசியல் லாபத்திற்காகவே முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு நாளை வடக்கு கிழக்கில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி சுமந்திரன் கோரிக்கை விடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டினார். போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க இன்றைய தினம்  கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.  இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,வடக்கு கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் பலர் முன்னைய காலங்களை போலவே தமது செயற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றார்கள்.குறிப்பாக தமிழரசு கட்சியின் சுமந்திரன், முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு நாளை வடக்கு கிழக்கில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை  விடுத்துள்ளார். இவர் பல பதவிகளை வகித்த காலப்பகுதியில்  முத்தையங்கட்டு பகுதிக்கு சென்றுள்ளாரா அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே அதனை கருதியே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்புபடுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றோம் இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement