• May 23 2026

புத்தளம் கடற்கரைப்பகுதியில் சுழற்றியடித்த மினி சூறாவளி; இடிந்து விழுந்த கூரை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

shanu / Oct 5th 2025, 12:10 pm
image

புத்தளம்  - ஆண்டிமுனை பகுதியிலுள்ள கந்தசாமி கோவிலுக்கருகிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை (4)மாலை மழையுடன் கூடிய மினி சூறாவளி  மிக வேகமாக வீசியது.


இதன்போது அந்தப்பகுதியலுள்ள ஒருவரின் வீடு மிக மோசமாக தாக்கப்பட்டது.


வீட்டில் உள்ள கூரை சேதமடைந்ததுடன், வீட்டின் உள் பகுதியில் சீலிங்சீட் உடைந்து மழை வெள்ளம் வீட்டுக்குள் பாய்ந்து. 


அந்த நேரம் கடலில் உருவான மினி சூறாவளி, சுழல் காற்றுடன் கரையைக்கடந்து பின்னர் கரையிலுள்ள தெப்பம் போன்ற மீனவர்களின் உபகரணங்களை மேலே தூக்கியவாறு சென்றது. அந்த நேரத்தில் அருகில் இருந்த மக்கள் பீதியுடன் ஓடத்தொடங்கினர்.


பின்னர் இது சம்பந்தமாக கிராம அதிகாரியிடம் அறிவித்த போது, அந்த இடத்துக்கு வந்த கிராம அதிகாரி விபரங்களை முந்தல் பிரதேச செயலகத்துக்கு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

புத்தளம் கடற்கரைப்பகுதியில் சுழற்றியடித்த மினி சூறாவளி; இடிந்து விழுந்த கூரை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் புத்தளம்  - ஆண்டிமுனை பகுதியிலுள்ள கந்தசாமி கோவிலுக்கருகிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை (4)மாலை மழையுடன் கூடிய மினி சூறாவளி  மிக வேகமாக வீசியது.இதன்போது அந்தப்பகுதியலுள்ள ஒருவரின் வீடு மிக மோசமாக தாக்கப்பட்டது.வீட்டில் உள்ள கூரை சேதமடைந்ததுடன், வீட்டின் உள் பகுதியில் சீலிங்சீட் உடைந்து மழை வெள்ளம் வீட்டுக்குள் பாய்ந்து. அந்த நேரம் கடலில் உருவான மினி சூறாவளி, சுழல் காற்றுடன் கரையைக்கடந்து பின்னர் கரையிலுள்ள தெப்பம் போன்ற மீனவர்களின் உபகரணங்களை மேலே தூக்கியவாறு சென்றது. அந்த நேரத்தில் அருகில் இருந்த மக்கள் பீதியுடன் ஓடத்தொடங்கினர்.பின்னர் இது சம்பந்தமாக கிராம அதிகாரியிடம் அறிவித்த போது, அந்த இடத்துக்கு வந்த கிராம அதிகாரி விபரங்களை முந்தல் பிரதேச செயலகத்துக்கு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement