வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சையளிக்கும் நடவடிக்கை நேற்று திருகோணமலை - கிளிவெட்டி மற்றும் கங்குவேலி பகுதிகளில் மாவட்ட கால்நடை பராமரிப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்களில் இருந்து அவற்றை பாதுகாக்கவும், அவற்றிற்கு சிகிச்சையளிப்பதன் ஊடாக அவற்றின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பரவலை தடுக்கவும், மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறித்த நடவடிக்கை கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நடவடிக்கை ஏனைய பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணமானது பால் உற்பத்தியில் பாரிய பங்கினை வகிக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாண மக்களில் வாழ்வாதார தொழிலாக விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு காணப்படுகின்ற நிலையில் வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க குறித்த திட்டம் ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கை ஆரம்பம் வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சையளிக்கும் நடவடிக்கை நேற்று திருகோணமலை - கிளிவெட்டி மற்றும் கங்குவேலி பகுதிகளில் மாவட்ட கால்நடை பராமரிப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.வெள்ள அனர்த்தத்தின் பின்னர் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்களில் இருந்து அவற்றை பாதுகாக்கவும், அவற்றிற்கு சிகிச்சையளிப்பதன் ஊடாக அவற்றின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பரவலை தடுக்கவும், மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறித்த நடவடிக்கை கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நடவடிக்கை ஏனைய பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கிழக்கு மாகாணமானது பால் உற்பத்தியில் பாரிய பங்கினை வகிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாண மக்களில் வாழ்வாதார தொழிலாக விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு காணப்படுகின்ற நிலையில் வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க குறித்த திட்டம் ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.