• May 23 2026

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்; போக்குவரத்து பாதிப்பு! - பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை

Chithra / May 22nd 2026, 10:52 am
image

கொழும்பு ஆமர் வீதி பகுதியில் ஜெயத்தவனாராமய விஹாரையை அண்மித்த வீதியில், வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளாதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 


அத்துடன் கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


ரன்வல பஹன பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் தற்போதைய போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.


புத்தளம் – கொழும்பு பிரதான வீதி தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், “குதிரைக் கோவில்” பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி களனி மற்றும் களு கங்கையை அண்மித்த சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதற்கமைய, களனி கங்கையை அண்மித்த ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கோபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதனை அண்மித்த சில தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபத்தா, கிரியெல்ல ஆகிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்; போக்குவரத்து பாதிப்பு - பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை கொழும்பு ஆமர் வீதி பகுதியில் ஜெயத்தவனாராமய விஹாரையை அண்மித்த வீதியில், வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளாதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். அத்துடன் கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ரன்வல பஹன பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் தற்போதைய போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.புத்தளம் – கொழும்பு பிரதான வீதி தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், “குதிரைக் கோவில்” பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி களனி மற்றும் களு கங்கையை அண்மித்த சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய, களனி கங்கையை அண்மித்த ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கோபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதனை அண்மித்த சில தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபத்தா, கிரியெல்ல ஆகிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement