தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் நிதி முகாமையாளராக பணிபுரிந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா (FD-140) விமானம் மூலம் நேற்று இரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் Green Channel வழியாக வெளியேற முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கைப்பை சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அப்போது கைப்பைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 512 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து குஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் கைது. தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் நிதி முகாமையாளராக பணிபுரிந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா (FD-140) விமானம் மூலம் நேற்று இரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.விமான நிலையத்தின் Green Channel வழியாக வெளியேற முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கைப்பை சோதனைக்குட்படுத்தப்பட்டது.அப்போது கைப்பைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 512 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.