• May 25 2026

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Chithra / Dec 5th 2025, 1:03 pm
image

 

மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக, தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

 

காலை 6.30 வரையான நிலவரப்படி நாட்டின் ஏனைய ஆறுகளின் நீர் மட்டம் சாதாரண நிலையில் இருப்பதாகக் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

 

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடைசி 21 மணிநேர காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சி குறித்த தகவல்களையும் நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

 

இதன்படி பனதுகம பகுதியில் 120.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உரவ  பகுதியில் 67.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், எல்லகவ பகுதியில் 58.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


இந்நிலையில்  அனர்த்தங்களினால், விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 1,160 சிறுகுளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், 747 சிறு குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

அநுராதபுரம், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள சிறு குளங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

 

இந்த குளங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை புனர் நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு  மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக, தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.  காலை 6.30 வரையான நிலவரப்படி நாட்டின் ஏனைய ஆறுகளின் நீர் மட்டம் சாதாரண நிலையில் இருப்பதாகக் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.  இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடைசி 21 மணிநேர காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சி குறித்த தகவல்களையும் நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  இதன்படி பனதுகம பகுதியில் 120.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உரவ  பகுதியில் 67.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், எல்லகவ பகுதியில் 58.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.இந்நிலையில்  அனர்த்தங்களினால், விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 1,160 சிறுகுளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.  அத்துடன், 747 சிறு குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அநுராதபுரம், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள சிறு குளங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.  இந்த குளங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை புனர் நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement