• Jun 20 2026

மஹர, கம்பஹாவில் திடீர் நீர்வெட்டு

Chithra / Jun 19th 2026, 11:46 am
image


மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று (19) முற்பகல் முதல் அவசர நீர்விநியோகத் தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


நாளை (20) முற்பகல் 8.00 மணி வரை இந்த அவசர நீர் விநியோகத் தடை அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 


கடவத்தை, மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீரைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மஹர, கம்பஹாவில் திடீர் நீர்வெட்டு மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று (19) முற்பகல் முதல் அவசர நீர்விநியோகத் தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை (20) முற்பகல் 8.00 மணி வரை இந்த அவசர நீர் விநியோகத் தடை அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. கடவத்தை, மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீரைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement