• Sep 03 2026

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீண்டநேர நீர்வெட்டு!

Chithra / Sep 2nd 2026, 2:33 pm
image


கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) இரவு முதல் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.


அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்படி, நாளை (03) இரவு 8.00 மணி முதல் மறுநாள் (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகளாக நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என NWSDB தெரிவித்துள்ளது.


நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.


எனவே, 24 மணிநேர நீர் விநியோகத் தடையை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு NWSDB கேட்டுக்கொண்டுள்ளது.


இதனால் ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீண்டநேர நீர்வெட்டு கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) இரவு முதல் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதன்படி, நாளை (03) இரவு 8.00 மணி முதல் மறுநாள் (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகளாக நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என NWSDB தெரிவித்துள்ளது.நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.எனவே, 24 மணிநேர நீர் விநியோகத் தடையை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு NWSDB கேட்டுக்கொண்டுள்ளது.இதனால் ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement