• Apr 15 2026

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

Chithra / Mar 1st 2026, 2:24 pm
image


நுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை இன்று காலை  முதல் காணப்படுகிறது.


நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.


மேலும் நுவரெலியா பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 இதேவேளை மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திலும் வாகனங்கள் வரிசை  மணித்தியால கணக்காக காத்து நிற்கும் நிலையில் உள்ளது.


நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை நுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை இன்று காலை  முதல் காணப்படுகிறது.நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.மேலும் நுவரெலியா பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திலும் வாகனங்கள் வரிசை  மணித்தியால கணக்காக காத்து நிற்கும் நிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement