• May 12 2026

துப்பாக்கிச் சூட்டில் பலியான உயிர்; காரில் வந்த மர்ம நபரால் காலியில் பதற்றம்

Chithra / May 12th 2026, 9:29 am
image

காலி - தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  

இன்று (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 


துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


தாக்குதலுக்கான காரணம் அல்லது தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


துப்பாக்கிச் சூட்டில் பலியான உயிர்; காரில் வந்த மர்ம நபரால் காலியில் பதற்றம் காலி - தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இன்று (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் அல்லது தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement