நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் ரஷ்ய - உக்ரைன் போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அவசர நேருக்கு நேர் (Face-to-Face) பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், அவரது போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா உடனடியாக நிராகரித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எழுதியுள்ள அந்த அதிரடிப் பகிரங்கக் கடிதத்தில், "ஐரோப்பாவில் நடந்து வரும் இந்த உக்ரைன் போரின் மீதான உலகளாவிய கவனம், மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பும் வரை நாம் காத்திருப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை" என்று மிக ஓப்பனாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி இராஜதந்திர ஈடுபாட்டின் (Direct Engagement) மூலம் மட்டுமே பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைத் திரும்பக் கொண்டு வர முடியும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இருதரப்பு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டு, அவை நடந்து முடியும் காலம் வரை இருநாடுகளுக்கும் இடையே "முழுமையான போர்நிறுத்தம்" (Complete Ceasefire) அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தனது கடிதத்தில் முன்மொழிந்துள்ளார். டொனெட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உக்ரைன் அதிபரின் இந்த உடனடிப் போர் நிறுத்த முன்மொழிவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
நேருக்கு நேர் பேசலாம் வாருங்கள்-போர் நிறுத்த அழைப்பை நிராகரித்த ரஷ்யா நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் ரஷ்ய - உக்ரைன் போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அவசர நேருக்கு நேர் (Face-to-Face) பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். எனினும், அவரது போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா உடனடியாக நிராகரித்துள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எழுதியுள்ள அந்த அதிரடிப் பகிரங்கக் கடிதத்தில், "ஐரோப்பாவில் நடந்து வரும் இந்த உக்ரைன் போரின் மீதான உலகளாவிய கவனம், மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பும் வரை நாம் காத்திருப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை" என்று மிக ஓப்பனாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி இராஜதந்திர ஈடுபாட்டின் (Direct Engagement) மூலம் மட்டுமே பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைத் திரும்பக் கொண்டு வர முடியும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.இந்த இருதரப்பு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டு, அவை நடந்து முடியும் காலம் வரை இருநாடுகளுக்கும் இடையே "முழுமையான போர்நிறுத்தம்" (Complete Ceasefire) அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தனது கடிதத்தில் முன்மொழிந்துள்ளார். டொனெட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், உக்ரைன் அதிபரின் இந்த உடனடிப் போர் நிறுத்த முன்மொழிவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.