• Mar 15 2026

Aathira / Nov 30th 2025, 8:06 am
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், மொனராகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றுக்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனுடன், களுத்துறை, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், 

கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திவருகிறது.

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், மொனராகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், களுத்துறை, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement